என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
Byமாலை மலர்30 Aug 2022 4:05 PM IST
- முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.
- காலையிலேயே சந்தைக்கு வந்த பொதுமக்கள் தேவையான பூக்களை வாங்கி சென்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் பல்லடம் ரோட்டில் காட்டன் மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காய்கறி மற்றும் பூ உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்வது வழக்கம். சந்தையில் மற்ற நாட்களை விட முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் காட்டன் மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருந்தது. காலையிலேயே சந்தைக்கு வந்த பொதுமக்கள் வீடுகளில் சாமி கும்பிடுவதற்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். இதனால் பூக்களின் விலை சற்று உயர்ந்திருந்தது.
அதன்படி ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கும், முல்லை ரூ.600, சம்பங்கி ரூ.250, செவ்வந்தி ரூ.160, ஜாதிப்பூ 480 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Next Story
×