என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அவினாசியை குளிர்வித்த மழை அவினாசியை குளிர்வித்த மழை](https://media.maalaimalar.com/h-upload/2023/03/31/1858626-untitled-1.webp)
கோப்புபடம்.
அவினாசியை குளிர்வித்த மழை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாலை மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் அரை மணி நேரம் கன மழை பெய்தது.
- ரோட்டில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அவினாசி :
அவினாசியில்கடந்த இரண்டு நாட்களாகபகல் வேளையில்சுட்டெரித்த வெயிலால் மக்கள் அவதி ப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் அரை மணி நேரம் கன மழை பெய்தது. ரோட்டில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்த போது பலத்த காற்று வீசியதால் அவினாசி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பி ருந்த மரம் முறிந்து விழுந்த து. அதில் அங்கு நிறு த்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களின் மீது மரக்கி ளைகள் விழுந்து வாகனங்கள் சேதம் அடைந்தன. மேலும் மின் கம்ப வயர்க ளில் மரக்கிளை கள் உரசி யபடி இருந்ததால் அப்பகு தியில் மின் இணைப்பு துண்டிக்க ப்பட்டது. அவினாசி முத்து செட்டிபா ளையத்தில் உள்ள அங்க ன்வாடி மையத்திற்குள் மழைநீர் புகுந்தது.
முறிந்து விழுந்த மரத்தை பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அப்புறப்ப டுத்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அவினாசி பகுதியில் நேற்று மாலை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி யானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.