என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாக சரி செய்யப்பட்ட தென்னம்பாளையம் மார்க்கெட்
- மேயர் தினேஷ்குமார் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- மார்க்கெட்டில் தேங்கியுள்ள கழிவு நீர் மற்றும் சகதிகளை அகற்றி சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் சந்தை பகுதியில் மழையின் காரணமாக, சுகாதார சீர்கேடு மற்றும் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நேற்று காலை மேயர் தினேஷ்குமார் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் 24 மணி நேரத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து தென்னம்பாளையம் மார்க்கெட்டில் தேங்கியுள்ள கழிவு நீர் மற்றும் சகதிகளை அகற்றி சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு தென்னம்பாளையம் மார்க்கெட் சுத்தம் செய்யும் பணி இரவு நடைபெற்றது. அந்த பணியினை மேயர் தினேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பணிகள் அனைத்தையும் விரைந்து விரைந்து முடித்து விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் முடித்துக் கொடுக்க உத்தரவிட்டார்.
நேற்று காலை ஆய்வு செய்து இரவோடு இரவாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய மேயரின் செயலை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.