என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விபத்துகளில் உயிரை காப்பாற்றியவர்கள் - மத்திய அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்
- சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக், ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.
- தகுதிவாய்ந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 22-ந் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர் :
மத்திய அரசின் உள்துறை சார்பில், தைரியமான மற்றும் மனிதாபிமான பணிகளை செய்து உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டு உயிர்களை காத்தவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக், ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு ஒரு நபரின் உயிரை காப்பாற்றும் மனிதத்தன்மை மிகுந்த தீரச்செயலான நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்களில் மீட்பு நடவடிக்கை போன்றவற்றில் இருந்து உயிரை காப்பாற்றிய நபர்களுக்கு 2022-ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக் வழங்கப்படுகிறது.
தகுதிவாய்ந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண்.35, 36-ல் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். வருகிற 22-ந் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.