search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் 26-வது வார்டில் குடிநீருடன் கழிவுநீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி -துர்நாற்றம் வீசியதாகவும் புகார்
    X

    குடிநீருடன் கருப்பு நிறத்தில் கழிவுநீரும் கலந்து வந்துள்ளதை படத்தில் காணலாம்.

    திருப்பூர் 26-வது வார்டில் குடிநீருடன் கழிவுநீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி -துர்நாற்றம் வீசியதாகவும் புகார்

    • சுப்பராயக்கவுண்டர் திருமண மண்டபம் அருகே 4-வது வீதிக்கு நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • தண்ணீர் பிடிப்பதை நிறுத்தி விட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட சாமுண்டிபுரத்தை அடுத்த சுப்பராயக்கவுண்டர் திருமண மண்டபம் அருகே 4-வது வீதிக்கு நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடுகளில் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்தனர். அப்போது குடிநீருடன் கருப்பு நிறத்தில் கழிவுநீரும் கலந்து வந்துள்ளது. மேலும் குடிநீரில் துர்நாற்றம் வீசி உள்ளது.

    இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உடனடியாக தண்ணீர் பிடிப்பதை நிறுத்தி விட்டனர். இதுபோன்ற சுகாதாரமற்ற வகையில் குடிநீர் வினியோகம் செய்வதை மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×