search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்ட திட்டகுழு உறுப்பினர்களுக்கான தேர்தல்விரைவில் நடத்த ஏற்பாடு
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்ட திட்டகுழு உறுப்பினர்களுக்கான தேர்தல்விரைவில் நடத்த ஏற்பாடு

    • மொத்தம் 454 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
    • மொத்தம் 18 பேர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படுகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பின ர்களை தேர்வு செய்வத ற்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பி னராக பதவி வகிப்போர், தேர்தல் மூலம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இதற்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினர் 17 பேர், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் 60, ஆறு நகராட்சிகளின் கவுன்சிலர்கள் 146 பேர், 15 பேரூராட்சிகளின் 231 பேர் என, மொத்தம் 454 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலில் இருந்து 8 பேர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலிருந்து 10 பேர் என, மொத்தம் 18 பேர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படுகின்றனர்.

    மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், சுமூகமான முறையில் எட்டுபேரை போட்டியின்றி தேர்வு செய்ய உத்தேசித்துள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் கை ஓங்கியுள்ளது. அதனால், தங்கள் கட்சி அமைச்சர், மாவட்ட செயலாளர்கள் வாயிலாக, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பதவியை பெற முயற்சித்துவருகின்றனர்.

    அதனால், திருப்பூர் மாவ ட்டத்தை பொருத்தவரை, மாவட்ட திட்டக்குழுவுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×