search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பின்னலாடைகளுக்கான வரி குறைப்பு அதிகரிப்பை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்கிறது
    X

    கோப்பு படம்.

    பின்னலாடைகளுக்கான வரி குறைப்பு அதிகரிப்பை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்கிறது

    • ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
    • எங்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு டிராபேக் சலுகையை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

    திருப்பூர்,அக்.22-

    ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    ஏற்றுமதி வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு நிலையில் ஏற்றுமதியாா்கள் செலுத்தும் வரியின் செலவை ஈடுகட்டும் வகையிலும் டியூட்டி டிராபேக் போன்ற சலுகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏற்றுமதி வா்த்தகத்தில் சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததும், ஏற்றுமதியான சரக்குக்கு சுங்கத் துறை டியூட்டி டிராபேக் வழங்கி வருகிறது. இந்நிலையில், பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி வழங்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஆ.சக்திவேல், தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோா் வலியுறுத்தி வந்தனா். இதனிடையே, ஏற்றுமதி செய்யப்படும் காட்டன் டி-சா்ட்டுகளுக்கு 2.1 சதவீதமாக இருந்த டியூட்டி டிராபேக்கை தற்போது 3.1 சதவீதமாகவும், செயற்கை நூலிழை ஆடை டி-சா்ட்டுகளுக்கு 3 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், குழந்தைகளுக்கான காட்டன் ஆடைகளுக்கு 2.1 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாகவும் டிராபேக் சலுகையை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் அக்டோபா் 30 -ந்தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    எங்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு டிராபேக் சலுகையை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு திருப்பூா் ஏற்றுமதியாளா்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. இதன் மூலமாக சா்வதேச சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளிக்க திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பாக அமையும்.

    இதற்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ஜவுளித் துறை செயலாளா் ரக்ஷனா சா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றாா்.

    Next Story
    ×