என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி கருப்புசட்டை அணிந்து திருப்பூர் தொழில் துறையினர் நாளை போராட்டம்
திருப்பூர்
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் நிட்மா இணை செயலாளர் கோபி, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று கலந்தாய்வு செய்தனர்.
மின்சார நிலைகட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வு, சூரியஒளி சக்தி மின் உற்பத்திக்கு கட்டணம் வசூலிப்பது ஆகியவை அனைத்து தொழில்துறையினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி, தொழில்துறையினரின் நிலையை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
நாளை 9-ந் தேதி காலை தொழில்துறையின் நிலை குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க வரும் தொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அல்லது கருப்பு சட்டை அணிந்து வர வேண்டும். அவரவர் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றி தொழில் பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு சங்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் வர வேண்டும். ஒவ்வொரு அமைப்பினரும் மின்கட்டண பாதிப்பு குறித்து மனுவில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். அனைத்து அமைப்பினரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் முன் அனைவரும் வர வேண்டும். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்து முதல்-அமைச்சருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.