என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளி ஆண்டு விழா
- கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
- பொன்னியின் செல்வன் நாவலை 35 நிமிடங்களில் நாடகமாக மாணவர்கள் நடித்துக்காட்டி அசத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் புண்ணியவதி சாலையில் அமைந்துள்ள கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி செயலாளர் நிவேதிகா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே. செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு உறுப்பினர் ஜெயசுதா பூபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கராத்தே, பிரமிட் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மேலும் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 35 நிமிடங்களில் சுவை குறையாத அளவில் நாடகமாக மாணவர்கள் நடித்துக்காட்டி அசத்தினர்.விழாவின் ஒரு நிகழ்வாக கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் சென்ற கல்வி ஆண்டிற்கான சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
விழாவில் கிட்ஸ் கிளப் பள்ளியின் தலைவர் மோகன் கே.கார்த்திக், பள்ளியின் இயக்குநர் கே.ரமேஷ், நிர்வாக இயக்குநர் ஐஸ்வர்யா நிக்கில், பள்ளியின் முதல்வர் தீபாவதி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்ததோடு அவர்களை பாராட்டினர்.