search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ராயபுரம் வரசித்தி விநாயகர்  கோவில் கும்பாபிஷேகம் நாளை  நடக்கிறது
    X

    திருப்பூர் ராயபுரம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    • கும்பாபிஷேகத்தை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் திருப்பணிக்குழுவினர் நடத்தி வைக்க உள்ளனர்.
    • இன்னல் கலைந்து இருவினை நீக்கும் ஈசன் மகானருக்கு 2-ம் கால வேள்வி, நிறைவேள்வி பேரொளி வழிபாடு நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் விநாயகபுரம், ராயபுரம் (விரிவு) பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகப்பெருமான் கோவிலில் நாளை (2-ந்தேதி) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.

    இதையொட்டி நேற்று விநாயகர் வழிபாடு, திருவருள் அனுமதி பெறுதல், நிலத்தேவர் வழிபாடு, திசைக்காவலர் வழிபாடு, கணபதி வேள்வி, நிலத்தவர் வேள்வி, திருமகள் வழிபாடு, நிறைவேள்வி, பேரொளி வழிபாடு நடைபெற்றது.மாலை கணபதி வழிபாடு, திருமண் எடுத்து முளைப்பாலிகை இட்டு வழிபாடு, காப்பணத்தல், திருவருட் சக்தியை திருக்குடத்தில் ஏற்றல், வேள்விச்சாலையில் அமர்த்தல், முதற்கால வேள்வி, கணபதிக்கு முதற்கால நிறைவேள்வி, பேரொளி வழிபாடு நடைபெற்றது.

    இன்று 1-ந்தேதி காலை 9மணிக்கு விநாயகர் வழிபாடு, ஆச்சார்யர் ஆன்மார்ந்த வழிபாடு, இன்னல் கலைந்து இருவினை நீக்கும் ஈசன் மகானருக்கு 2-ம் கால வேள்வி, நிறைவேள்வி பேரொளி வழிபாடு நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு கோபுர கலசம் வைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மூவா வினைகளை களைந்து முத்திக்கு வித்தாகி முக்கண் முதல்வர் மகனுக்கு 3-ம் காலவேள்வி, நிறைவேள்வி பேரொளி வழிபாடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை 2-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நான்மறைபோற்றும் நாயகன், முப்பழம் நுகரும் மூஷிகவாகனம், வரமருளும் வரசித்தி விநாயகபெருமானுக்கு 4-ம் கால வேள்வி நடக்கிறது. காலை 6 மணிக்கு திருவருட்சக்திகளை வேள்விச்சாலையிலிருந்து மூலத்திருமேனிக்கு அளித்தல், திரவிய ஆகுதி, முழுநிைற வேள்வி நடக்கிறது. 6-30மணிக்கு கோபுர கும்பாபிஷேகம் நன்னீராட்டு , 6-40மணிக்கு பரிவார தீர்த்தங்கள் நன்னீராட்டு நடக்கிறது.

    7 மணிக்கு விருச்சிக லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் திருப்பணிக்குழுவினர் நடத்தி வைக்க உள்ளனர். காலை 7.30 மணிக்கு பதின் மங்களகாட்சி பெருஞ் திருமஞ்சனம், அலங்காரபூஜை, பேரொளி வழிபாடு, திருக்காப்பு காத்தல், அருள்பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது. பின்னர் மங்கள இசையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×