என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் தேர் திருவிழா
- நாளை மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
- 2-ந் தேதி மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர் திருவிழா இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி இன்று 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6மணிக்கு கிராமசாந்தி அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. நாளை 27-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நாளை முதல் 1-ந்தேதி வரை காலை 10 மணி மற்றும் மாலை 6-30மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.
நாளை 27-ந்தேதி கற்பக விருட்ஷ வாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2-ம் நாளான 28-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) பூத வாகனம், அன்ன வாகனத்திலும், 3-ம் நாளான 29-ந்தேதி(திங்கட்கிழமை) ராவணேஸ்வரர் வாகனம், காமதேனு, சேஷ வாகனத்திலும், 4-ம் நாளான 30-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கற்பக விருட்சம், அதிகார வாகனம், யாழி வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 5-ம் நாளான 31-ந்தேதி(புதன்கிழமை) பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கருட சேவை புறப்பாடு நடக்கிறது.
6-ம் நாளான 1-ந்தேதி(வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 7-ம் நாள் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3-30மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 5மணியில் இருந்து 6மணிக்குள் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.
8-ம்நாளான 3-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 3-30மணிக்கு பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 9-ம் நாளான 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை பரிவேட்ைட, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 10-ம்நாளான 5-ந்தேதி (திங்கட்கிழமை) தெப்பத்திருவிழா (பெருமாள் கோவில் ) நடக்கிறது.
11-ம்நாளான 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தரிசனம் , 12-ம்நாளான 7-ந்தேதி (புதன்கிழமை) மஞ்சள் நீரரட்டு விழா, மலர் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 13-ம் நாளான 8-ந்தேதி (வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை காலை 10மணி, மாலை 7மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
விழாவையொட்டி நாளை 27-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை மாைல 6மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்படி நாளை 27-ந்தேதி மாலை 6மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி ஜெயந்தி ஸ்ரீதரின் தெய்வீக பாடல் நிகழ்ச்சி,29-ந்தேதி திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம், 30-ந்தேதி சவிதா ஸ்ரீராமின் நாம சங்கீர்த்தனம், 31-ந்தேதி நவீன் பிரபஞ்ச நடன குழுவின் கொங்கு நாட்டு பாரம்பரிய ஒயில் கும்மி நடனம் நிகழ்ச்சி, 1-ந்தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 2-ந்தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 3-ந்தேதி நரசிம்மர் தரண்டகம் என்ற தலைப்பில் நாட்டிய நாடகம், 4-ந்தேதி வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி, 5-ந்தேதி மணிகண்டனின் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ,6-ந்தேதி தெய்வீக பாடல்கள் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்