search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து அதிகரிப்பால் திருப்பூரில் தக்காளி விலை குறைந்தது
    X

    வரத்து அதிகரிப்பால் குவித்து வைக்கப்பட்டிருந்த தக்காளிகள்.

    வரத்து அதிகரிப்பால் திருப்பூரில் தக்காளி விலை குறைந்தது

    • 28 கிலோ எடை கொண்டு பெரிய ‘டிப்பர்’ 300 ரூபாய்க்கும் விற்பனையானது.
    • தாளவாடியில் இருந்து தினமும் 10 லாரி தக்காளி திருப்பூர் வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இந்த வாரத்தில் அதிகரித்துள்ளது. சீசன் துவங்கி உள்ளதால் விளைவித்த காய்களை கொண்டு வந்து விவசாயிகள் குவிக்கின்றனர்.ஒரே நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாநில வரத்தும் அதிகரித்துள்ளதால், தக்காளி விலை குறைய துவங்கியுள்ளது.

    இந்த மாத துவக்கத்தில் கிலோ 20 முதல் 25 ரூபாய் விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி, நடப்பு வாரம் கிலோ 14 ரூபாயானது. தெற்கு உழவர் சந்தையில் 14 கிலோ எடை கொண்ட சிறிய 'டிப்பர்' 180 ரூபாய்க்கும், 28 கிலோ எடை கொண்டு பெரிய 'டிப்பர்' 300 ரூபாய்க்கும் விற்பனையானது.

    மொத்த விலையில் முதல் தர தக்காளி கிலோ 14 முதல் 16 ரூபாய்க்கு விற்றது. சில்லறை விலையில் தக்காளி கிலோ 18 முதல் 20 ரூபாய்க்கு விற்றது.கர்நாடக மாநிலம் மைசூரு தமிழக - கர்நாடக எல்லையான தாளவாடியில் இருந்து தினமும் 10 லாரி தக்காளி (சராசரியாக 30 டன்) திருப்பூர் வருகிறது.இதனால், திடீர் ரோட்டோர தக்காளி கடைகள் முளைத்துள்ளது. மொத்தமாக குறைந்த விலைக்கு அடித்து பேசி வாங்கும் வியாபாரிகள் தக்காளி 7 கிலோ 100 ரூபாய்க்கு ஆட்டோவில் கொட்டி விற்கின்றனர்.

    Next Story
    ×