search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரிகள் கடை அமைப்பதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் - கூட்டுறவு அதிகாரியிடம் விவசாயிகள் மனு
    X

    கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனரிடம் விவசாயிகள் மனு அளித்த காட்சி.

    வியாபாரிகள் கடை அமைப்பதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் - கூட்டுறவு அதிகாரியிடம் விவசாயிகள் மனு

    • விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது.
    • விவசாயிகள் பாதிக்கும் வகையில் வியாபாரிகள் கடை அமைக்க அனுமதிக்க கூடாது .

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தில் இயங்கி வரும் உழவர் சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் சந்தை வியாபாரத்தை கெடுக்கும் வகையில் வியாபாரிகள் சாலையோரமாக கடை அமைத்து விதிகளை பின்பற்றாமல் காலை நேரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களின் வருகை குறைவதால் விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது.

    இந்நிலையில் பல்லடம் சாலையில் உள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் காலை 4 மணி முதல் 9 மணி வரை வியாபாரிகள் கடை அமைத்துக் கொள்ளலாம் என கூட்டுறவு சங்கத்தின் மூலம் அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏபிடி. எம் .மகாலிங்கம், திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் தெற்கு உழவர் சந்தை விவசாயிகள் ஆகியோர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனரை நேரில் சந்தித்து உழவர் சந்தை இயங்கும் நேரத்தில் தங்களது வளாகத்தில் வியாபாரிகளுக்கு கடை அமைக்க வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வியாபாரிகள் இங்கு கடை அமைக்க அனுமதிக்க கூடாது எனவும் மனு வழங்கப்பட்டது.

    Next Story
    ×