search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிப்ட்-டீ கல்லூரியில் பொறியியல் நுட்பங்களை செயல்படுத்துவது குறித்த பயிற்சி
    X

    நிப்ட்-டீ கல்லூரி

    நிப்ட்-டீ கல்லூரியில் பொறியியல் நுட்பங்களை செயல்படுத்துவது குறித்த பயிற்சி

    • பயிற்சி முடித்த 18 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    • “எதிர்காலத்தில் தொழில்முனைவோராக இருக்கும் மாணவர்களுக்கு வணிக யுக்திகளை கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் ஆடை உற்பத்தி தொழில்நுட்பத்துறை சார்பில் ஆடை உற்பத்தி, ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை விற்பனை ஆகிய இறுதியாண்டு மாணவர்களுக்கு, ஆடைத் துறை மற்றும் உற்பத்தித்துறையில் தொழில்துறை பொறியியல் நுட்பங்களை செயல்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த 18 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் துறைத்தலைவர் டாக்டர் பி.பி.கோபாலகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன், ஸ்கிலிப்ட் கன்சல்டிங் மேனேஜிங் பார்ட்னர் நந்தகுமார்,வேலை வாய்ப்பு அலுவலர் பி.வி.சத்தியநாராய–ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இப்பயிற்சிக்கு 75 மாணவர்கள் விண்ணப்பித்து நேர்காணல் மூலம் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு திருப்பூர், கரூர்,விராலிமலை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் கடந்த டிசம்பர் முதல் மார்ச் வரை 4 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது என்று துறைத் தலைவர் டாக்டர் பி.பி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

    ஸ்கிலிப்ட் கன்சல்டிங்கின் நிர்வாக பங்குதாரர் நந்தகுமார் கூறுகையில், இப்பயிற்சியில் தையல்காரர்களின் உற்பத்திதிறன் கணக்கீடு, ஆடை உற்பத்திக்கான நிலையான நேரத்தை கணக்கிடுதல், ஒரு ஆடைக்கு தேவையான ஆட்கள் மற்றும் எந்திரங்களின் எண்ணிக்கை போன்ற தொழில்துறை பொறியியல் நுட்பங்களின் அடிப்படைகளை மாணவர்கள் கற்றுக்கொண்டனர் என்றார். கல்லூரி முதல்வர் கூறுகையில் "எதிர்காலத்தில் தொழில்முனைவோராக இருக்கும் மாணவர்களுக்கு வணிக யுக்திகளை கற்றுக்–கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றார். முடிவில் வேலைவாய்ப்பு அலுவலர் பி.வி.சத்தியநாராயணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×