search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அரசு கல்லூரியில்  2- ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 12-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    உடுமலை அரசு கல்லூரியில் 2- ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 12-ந் தேதி நடக்கிறது

    • முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன.
    • தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 2- ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 12 ம் தேதியன்று நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர். சோ.கி.கல்யாணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்த 864 இடங்களில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 286 காலி இடங்களுக்கு 2- ம் கட்ட கலந்தாய்வு 12 ம் தேதி நடைபெற உள்ளது.அறிவியல் பாடப்பிரிவு தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்களில், இயற்பியல்,கணிதம், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்குத் தகுதியுள்ள, பிளஸ்-2வில் கணிதம் பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

    கணினி அறிவியல்(சுழற்சி II),தாவரவியல் ,வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பின்தங்கிய வகுப்பில் (பிசி.,) ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.இவ்விடங்களுக்கான கலந்தாய்வில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த, பிளஸ்-2வில் – கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களைப் பயின்ற விண்ணப்பதாரர்கள் 12 -ந் தேதியன்று காலை 9 மணிக்கு கலந்து கொள்ளலாம்.

    கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் பிபிஏ, பி.காம், பிகாம்(சிஏ), பி.காம்(இ.காம்) , அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கைக் கலந்தாய்வில்,பிளஸ்-2வில் தொழில்முறை பாடப்பிரிவில் பயின்ற, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு தரவரிசை 1208 முதல் 2651 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் காலை 11 மணிக்கு கலந்து கொள்ளலாம்.இளங்கலைத் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள பின்தங்கிய வகுப்பு (பி.சி.,) மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பு (எம்.பி.சி.) இடங்களுக்கு மட்டும், தமிழ் பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் 12.6.2023 அன்று பிற்பகல் 1மணிக்குக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.இளங்கலை ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு அனைத்து வகுப்பினை சேர்ந்த, ஆங்கில பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறிய விண்ணப்பதாரர்களும் 2- ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு கல்லூரியின் www.gacudpt.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×