search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன்மலையில் வீரகாளியம்மன் தேர் திருவீதி உலா
    X

    கோப்புபடம்

    சிவன்மலையில் வீரகாளியம்மன் தேர் திருவீதி உலா

    5-ந்தேதி சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. இந்தநிலையில் சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    இந்நிலையில் வீரகாளியம்மன் கோவில் தேர் திருவீதியுலா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மாலை 4 மணியளவில் வீரகாளியம்மன் தேர் பாதை, மலை அடிவாரம், பெரிய வீதி வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.வரும் 5-ந்தேதி சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது.

    Next Story
    ×