search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் உண்டியலில் ரூ. 6 லட்சம் பணம், 37 கிராம் தங்கம் காணிக்கை
    X

    ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட காட்சி.

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் உண்டியலில் ரூ. 6 லட்சம் பணம், 37 கிராம் தங்கம் காணிக்கை

    • திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை, துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
    • 19.400 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் உண்டியல் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை, துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.6 லட்சத்து 52 ஆயிரத்து 53 பணம் மற்றும் 37 கிராம் தங்கம், 19.400 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. உண்டியல் திறப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை காங்கேயம் ஆய்வாளர் சுமதி, வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    வெள்ளக்கோவில் வீரக்குமாரசாமி கோவில் தேங்காய் பழக்கடை ஒரு ஆண்டிற்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை, திருப்பூர் துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.2023ம் ஆண்டு ஜூலை 1 ந்தேதி முதல் 2024ம் ஆண்டு ஜூன் 30 ந்தேதி வரை தேங்காய் பழம் கடை நடத்தும் உரிமம் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 500 க்கு ஏலம் விடப்பட்டது. அதே போல் கோவில் வளாகத்தில் ஒரு ஆண்டிற்கு சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம் ரூ.19 ஆயிரத்து 500க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை காங்கயம் ஆய்வாளர் சுமதி, வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×