search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பாத்திர தொழிலாளா்கள் சங்க சிறப்பு மகாசபை  கூட்டம் - நாளை நடக்கிறது
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் பாத்திர தொழிலாளா்கள் சங்க சிறப்பு மகாசபை கூட்டம் - நாளை நடக்கிறது

    • பாத்திர தொழிலாளா்களுக்கான கூலி உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை முடிந்து ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளது.
    • அனுப்பா்பாளையம் காமாட்சியம்மன் பாத்திரத் தொழிலாளா் சங்க கட்டட வளாகத்தில் நடைபெறும்

    திருப்பூர்:

    திருப்பூா், அனுப்பா்பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எவா்சில்வா், பித்தளை, செம்பு பாத்திர தொழிலாளா்களுக்கான கூலி உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை முடிந்து ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 2023 ம் ஆண்டு ஜனவரி 1 ந் தேதி முதல் 2025 ம்ஆண்டு டிசம்பா் 31 ந் தேதி வரையில் எவா்சில்வா், பித்தளை, செம்பு பாத்திரத் தொழிலாளா்களுக்கு கொடுக்கப்படவேண்டிய கூலி உயா்வு விவரங்களை வெளியிடும் சிறப்பு மகாசபைக் கூட்டம் நாளை 2-ந்தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    அனுப்பா்பாளையம் காமாட்சியம்மன் பாத்திரத் தொழிலாளா் சங்க கட்டட வளாகத்தில் நடைபெறும் மகாசபைக் கூட்டத்தில் அனைத்து தொழிலாளா்களும் பங்கேற்க வேண்டும் என்று பாத்திரத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

    Next Story
    ×