என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுமா - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- ஒரு வாரத்துக்கும் அதிகமாக சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில், சோதனை ஓட்டத்தின் போதே பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி, காரத்தொழுவு மற்றும் மெட்ராத்தி ஊராட்சிக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இத்திட்ட குழாய்கள், திருமூர்த்தி அணையில் இருந்து மடத்துக்குளம், கணியூர் வழியாக திட்ட கிராமங்களுக்கு செல்கிறது. இதில்உடையார்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து, துங்காவி, மெட்ராத்தி மற்றும் காரத்தொழுவு ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்தடை, பிரதான குழாய் உடைப்பு, புதிய குடிநீர் திட்டத்துக்கான சோதனை ஓட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்களால் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஒரு வாரத்துக்கும் அதிகமாக சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீருக்காக உள்ளூர் நீராதாரங்களை தேடிச்செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: - உடையார்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து, மூன்று ஊராட்சிகளுக்குட்பட்ட 25 கிராமங்கள் வரை பயன்பெற்று வருகின்றன. ஒரு வாரமாக வினியோகத்தில், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
அதிக கிராமங்கள் பயன்பெறுவதால் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகளை தவிர்க்க குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில், சோதனை ஓட்டத்தின் போதே பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அத்திட்டத்துக்கான சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுவதால் வினியோகம் பாதித்துள்ளது. விரைவில் வினியோகம் சீராகும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்