என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கல்பனா சாவ்லா விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம். கல்பனா சாவ்லா விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.](https://media.maalaimalar.com/h-upload/2023/07/02/1908131-09kalpana.webp)
X
கோப்பு படம்
கல்பனா சாவ்லா விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
By
மாலை மலர்2 July 2023 11:13 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கல்பனா சாவ்லா விருது, இந்த ஆண்டுக்கு வருகிற சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது.
- ஏதேனும் ஒரு வகையில் துணிச்சலான முறையில் ஈடுபட்டு செயலாற்றிய தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்பனா சாவ்லா விருது, இந்த ஆண்டுக்கு வருகிற சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பாராட்டத்தக்க வகையில் வீர, தீர செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு வகையில் துணிச்சலான முறையில் ஈடுபட்டு செயலாற்றிய தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://award.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக வருகிற 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நல அலுவலகத்தில் 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0421 2971168 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X