search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் அம்மன் கோவிலில் இளைஞர்கள் கத்தி போட்டு ரத்த காணிக்கை
    X

    இளைஞர்கள் பக்திபரவசத்துடன் கத்தியால் உடலில் அடித்துக் கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி.

    திருப்பூரில் அம்மன் கோவிலில் இளைஞர்கள் கத்தி போட்டு ரத்த காணிக்கை

    • ஸ்ரீ ராமலிங்கர் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இளைஞர்கள் அனைவரும் தீஸ்க்கோ தாயே., தீஸ்கோ.. என்று கூறி கத்திப்போட்டு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் விக்னேஸ்வரா காலனியில் சிம்ம வாகனத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ராமலிங்கர் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடுதல், சக்தி அழைத்தல், கரக ஊர்வலம் படைக்கலம் கொண்டு வருதல் போன்ற பல்வேறு விசேஷ வைபவங்கள் நடத்தப்பட்டன. இதில் அந்த பகுதி இளைஞர்கள் பக்திபரவசத்துடன் கத்தியால் உடலில் அடித்துக் கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இதில் சிலருக்கு காயம் ஏற்பட்ட போதும் அவர்கள் தொடர்ச்சியாக கத்தி போட்டனர். கத்தி போடும் போது இளைஞர்கள் அனைவரும் தீஸ்க்கோ தாயே., தீஸ்கோ.. என்று கூறி கத்திப்போட்டு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர். இத்துடன் பொங்கல் பானையின் மீது வாள் நிறுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கண க்கான பக்தர்கள் பொங்கல் பானையின் மீது எந்த ஒரு பிடிமானமும் இல்லாத வகையில் வாள் தனித்து நிற்கும் வினோத நிகழ்வை கண்டு ரசித்தனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த வினோத விசேஷம் நடத்தப்படுவதால் கணக்கம்பாளையம் மட்டுமல்லாது பெருமாநல்லூர் திருப்பூர் காங்கேயம் அவிநாசி புளியம்பட்டி சத்தியமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இந்த அதிசய வாளினை காண வந்தனர்.

    Next Story
    ×