search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது
    X
    குற்றவாளியின் புகைப்படம்,

    வெள்ளகோவிலில் செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது

    • 5 ஆண்டுகளாக வெள்ளகோவிலில் தங்கி செல்போன் கடை நடத்தி வருகின்றார்.
    • ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.

    வெள்ளகோவில்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பயாஸ் அகமது (வயது 38) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வெள்ளகோவிலில் தங்கி செல்போன் கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுக்க ப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது வெள்ளகோவில் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் திருமுருகன் என்பவர் செல்போன் கடையில் திருடியது தெரியவந்தது.

    தஞ்சாவூரில் பதுங்கி இருந்த திருமுருகனை வெள்ளகோவில் போலீசார் பிடித்து அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை கைப்பற்றி, திருமுருகனை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×