என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![டத்தோ எஸ்.சாமிவேலு மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் டத்தோ எஸ்.சாமிவேலு மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/16/1762458-mks.jpg)
X
முதல்வர் ஸ்டாலின்
டத்தோ எஸ்.சாமிவேலு மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
By
மாலை மலர்16 Sept 2022 5:55 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு காலமானார்.
- டத்தோ எஸ்.சாமிவேலுவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவருமான டத்தோ சாமிவேலு (86), கோலாலம்பூரில் நேற்று காலமானார். டத்தோ எஸ்.சாமிவேலு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டத்தோ எஸ்.சாமிவேலுவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான எஸ்.சாமிவேலு அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
X