என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
- கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி தேர்வு நடைபெற்றது.
- 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி குரூப் 2 முதன்மை தேர்வை நடத்தியது. ஆனால், முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதனால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒருநாள் முன்னதாக இன்று குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 10 1/2 மாதங்கள் கழித்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு நடத்தப்பட்டபோது 5486 இடங்களுக்கு 55 ஆயிரம் பேர் தேர்வு எழுந்தியிருந்தனர். தற்போது காலிபணியிடங்கள் 6157 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு மே மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல் நிலை தேர்வு நடைபெற்றது.