என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குரூப்-1, 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
- 1,089 கள ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 6-ந்தேதி நடத்தப்பட்டது.
- குரூப்-2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடத்தப்படும்.
சென்னை :
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பல்வேறு இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டதோடு, அதற்கான தேர்வையும் நடத்தி முடித்தது. அந்த வகையில் குரூப்-1, குரூப்-4 உள்பட பல்வேறு பதவிகளில் வரும் ஏராளமான பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது.
இந்த தேர்வின் முடிவுகள் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டு இருந்த மாதங்களில் வெளியாகும் என்று தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
உதாரணமாக, 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவு, முதலில் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் மாதம் முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி மாதத்தில் தான் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.
அதன்படி, 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற முழு விவரத்தை தேர்வை நடத்திய டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:-
* 830 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சேவைகள் பிரிவுக்கான தேர்வு முடிவு ஏற்கனவே ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும்.
* 7,301 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவு, அக்டோபரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு, தற்போது 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும்.
* 1,089 கள ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 6-ந்தேதி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஜனவரி மாதம் வெளியிடப்படப்படும்.
* 92 பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும்.
இதேபோல், டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட்ட மேலும் 8 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த தகவலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குரூப்-2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்