என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திண்டிவனம் அருகே குற்ற சம்பவங்களை தடுக்க டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மது அருந்தியவர்கள் அலறியடித்து ஓட்டம் திண்டிவனம் அருகே குற்ற சம்பவங்களை தடுக்க டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மது அருந்தியவர்கள் அலறியடித்து ஓட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/30/1924361-trone-dvanam.webp)
திண்டிவனம் அருகேயுள்ள காட்டுப் பகுதியை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் நடந்த போது எடுத்தபடம்.
திண்டிவனம் அருகே குற்ற சம்பவங்களை தடுக்க டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மது அருந்தியவர்கள் அலறியடித்து ஓட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
- ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சசாங்சாய் பொறுப்பேற்ற பிறகு குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அதன்படி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி, காட்டுப்பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவி ட்டார். இதையடுத்து திண்டிவனம் அருகேயுள்ள ஆச்சிப்பாக்கம் காட்டுப் பகுதியில் குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி இன்று நடைபெற்றது.
திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பா ர்வையில் கண்காணிப்பு பணி நடைபெற்றது. அதே சமயத்தில் காட்டுப்பகுதிக்குள் ஓலக்கூர் போலீசார் அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது காட்டுப் பகுதியில் கூட்டம் கூட்ட மாக அமர்ந்து மது அருந்திய வர்கள், பணம் வைத்து சூதாடியவர்கள், டிரோன் கேமராவை கண்டவுடன் அலறியடித்து ஓடினர்.இவர்களை மடக்கி பிடித்த ஓலக்கூர் போலீசார், பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தக்கூடா தெனவும், சூதாட்டம் விளையாடக்கூடாது என்றும் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். மேலும், டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.