என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சின்னசேலம் அருகே பாதை தகராறில் இரு தரப்பினர் மோதல் சின்னசேலம் அருகே பாதை தகராறில் இரு தரப்பினர் மோதல்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/08/1758581-mothal.jpg)
சின்னசேலம் அருகே பாதை தகராறில் இரு தரப்பினர் மோதல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது.
- இரு தரப்பினையே பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஆனது. ஒருவருக்கொருவர் கல்லால் தாக்கி கொண்டார்கள்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (வயது 38), ஆனந்தி, (32), குடும்பத்தினருக்கும், மணிகண்டன் (40), ராதா (35), முருகேசன் குடும்பத்தினருக்கும், நிலத்தில் உள்ள பாதை சம்பந்தமாக இரு குடும்பத்தினர் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டு ராதா தரப்புக்கு பாதை வேண்டாம் என்று சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ராதா நிலத்துக்கு முன் உள்ள பாதயை திருத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில் நிலத்திற்கு முன்னால் உள்ள பாதையை திருத்தியதால் ராதா குடும்பத்தை சேர்ந்தவர்கள் நிலத்திற்கு செல்ல வழி இல்லாமல் திருத்துகிறாயே என்று எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனால் இரு தரப்பினையே பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஆனது. ஒருவருக்கொருவர் கல்லால் தாக்கி கொண்டார்கள். இதனால் செந்தில், ஆனந்தி, மணிகண்டன், ராதா, ஆகியோர் காயம் அடைந்தார்கள். இதனால் இரு தரப்பினரும் கல்லால் அடித்துக் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாக இரு தரப்பினரும் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .