search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடல் தாயை பாதுகாப்பது நமது கடமை:  மத்திய இணை மந்திரி முருகன் வேண்டுகோள்
    X

    எல்.முருகன்

    கடல் தாயை பாதுகாப்பது நமது கடமை: மத்திய இணை மந்திரி முருகன் வேண்டுகோள்

    • வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை நாம் அளிக்க வேண்டும்.
    • கடற்கரையை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது

    பெசன்ட் நகர்:

    சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற கடற்கரை தூய்மை இயக்கம் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு, கடற்கரையை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    8 ஆயிரம் கி. மீ. பரந்து விரிந்துள்ள இந்திய கடற்கரையில் எண்ணற்ற வளங்கள் பொதிந்து கிடக்கின்றது. கடலை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு இருந்த போதும், கடல்சார் பொருட்கள் உற்பத்தி அதிகமாகவே இருந்தது.


    இத்தகைய கடல் அன்னையை தாய் நாட்டை போன்று போற்றி பாதுகாக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை நாம் அளிக்க வேண்டும். எனவே கடலை, கடற்கரையை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. 100வது சுதந்திர தினத்தில் இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதை நோக்கி நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×