என் மலர்
உள்ளூர் செய்திகள்

வள்ளல் பெருமானின் முப்பெரும் விழா
- 200-வது வருவிக்க உற்ற ஆண்டு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
- 200 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி நகர், மல்லிகார்ஜூன சுவாமி மற்றும் பரவாசு தேவ சுவாமி திருக்கோவிலில் வள்ளல் பெருமானின் 200-வது வருவிக்க உற்ற ஆண்டு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி விழாவில் தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மற்றும் பென்னாகரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து 200 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கோட்டை, மல்லிகார்ஜூனசுவாமி மற்றும் பரவாசுதேவசுவாமி திருக்கோவி ல் செயல் அலுவலர் ராஜகோபால், காலபைரவர் திருக்கோவி ல் செயல் அலுவலர் ஜீவானந்தம், காரிமங்கலம் ஆய்வர் செல்வி, தருமபுரி வழக்கு ஆய்வர் பெரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






