என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே வீரபாண்டி சித்திரை திருவிழா ஏப்.18ந் தேதி தொடக்கம்!
- வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திரை திருவிழாவுக்காக ஊர்திரும்புவார்கள்.
- திரு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தகோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் நடைபெறும்.
இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திரை திருவிழாவுக்காக ஊர்திரும்புவார்கள்.
அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பால்குடம், காவடி என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். மே மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவதால் சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்கும் வண்ணம் ராட்டிணம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற ஏப்.18ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் பக்தர்கள் மஞ்சள் காப்பு அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோவிலில் கம்பம் நடுதல், பல்லக்கில் வீதி உலா, அம்மன் புறப்பாடு, தேரோட்டம் ஆகியவை மே 5ந் தேதி முதல் 16ந் தேதி வரை நடைபெறுகிறது. திரு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.