search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எழும்பூர், சென்ட்ரல் நிலையங்களில் நிழற்கூரை இல்லாததால் வெயில் மழையால் பாதிக்கப்படும் வாகனங்கள்
    X

    எழும்பூர், சென்ட்ரல் நிலையங்களில் நிழற்கூரை இல்லாததால் வெயில் மழையால் பாதிக்கப்படும் வாகனங்கள்

    • எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 3 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

    சென்னை:

    எழும்பூர், சென்ட்ரல், ரெயில் நிலையங்களில் நிழல் கூரை இல்லாததால் வெயில், மழையால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் பழமை வாய்ந்த எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள ரெயில் நிலைய வளாகத்தில் கட்டண வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகின்றன.

    இங்குள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை கட்டணம் செலுத்தி நிறுத்தி வருகிறார்கள். ஆனால் வாகனங்களுக்கு நிழற்கூரை, எந்தவித பாதுகாப்பும், பராமரிப்பும் இல்லை. இதனால வெயில், மழையால் வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் பகுதியில் வெயில், மழையால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிழற்கூரை மற்றும் பந்தல் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு தினமும் ஏராளமான பயணிகள் விரைவு ரெயில், மின்சார ரெயிலில் பயணம் செய்ய மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வாகனங்களில் வருகின்றனர். எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 3 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த 2 பெரிய ரெயில் நிலையங்களில் உள்ள வாகன பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் செய்து கொள்ள எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் வாகனங்கள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். வெளியூர்களுக்கு செல்பவர்களின் இருசக்கர வாகனங்கள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    எனவே எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்களில் உடனடியாக கூரைகள் அமைத்து வெயில், மழையால் பாதிக்கப்படும் வாகனங்களை பாதுகாக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×