என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடியோ: மாநாட்டில் ஒலித்த "கடவுளே - அஜித்தே".. விஜய் கொடுத்த ரியாக்ஷன் வைரல்
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
- விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இதனையடுத்து மாநாட்டில் விஜய் பேசி கொண்டிருந்த போது, மேடை அருகில் இருந்த ரசிகர்கள் திடீரென "கடவுளே - அஜித்தே" என கோஷமிட ஆரமித்தனர். இதை சற்றும் எதிர்பாராத விஜய் உடனே பேச்சை நிறுத்தி விட்டு அமைதி அமைதி என்பது போல கையை அசைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர்.
Next Story






