search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
    X

    விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., சுமதியிடம் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை கோரிக்கை மனு அளித்தார். 

    விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

    • விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • அனைவருக்கும் எவ்வித நிபந்தனையின்றி நீல நிற அட்டை வழங்க வேண்டும்.

    விக்கிரவாண்டி, நவ.10- –

    விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழரசி உட்பட 90பேர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி பி.டி.ஓ.,அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .பின்னர் அவர்கள் பி.டி.ஓ., சுமதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்:- மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையின்றி நீல நிற அட்டை வழங்க வேண்டும். தேசிய வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதத்தில் 2 வாரம் பணி அளித்து, அவர்களுக்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து முழு ஊதியம் ரூ. 281 வழங்கிட வேண்டும்.

    அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தில் வீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் வறுமை கோட்டின் கீழ் சேர்க்க வேண்டும். விக்கிரவாண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறானாளிகள் தன்னிச்சையாக சென்று வர சாய்தள வசதி அல்லது லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர். விக்கிரவாண்டி ஒன்றியம் கொங்கராம்பூண்டியில் நேற்று நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பங்கேற்ற அதிகாரிகள் சென்றதால் ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு 3 மணி நேரம் அமர்ந்து காத்திருந்துமனு அளித்து சென்றனர்.

    Next Story
    ×