என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெசவுத்தொழிலி்ல் போதிய வருமானம் இல்லாமல் நெசவாளர்கள் பாதிப்பு
- வறுமையான சூழல் எங்களது குழந்தைகளுக்கும் வர வேண்டாம் என்று எண்ணம் தோன்றுகிறது.
- வருவாய் பெற முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி யுள்ளோம்
உடுமலை :
உடுமலை சுற்றுப்புற பகுதியில் நெசவுத்தொழில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் நெசவை குல தொழிலாக பாரம்பரியமாக நீண்ட காலமாக செய்து வருகின்றனர். மலையாண்டிபட்டினம் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றைய ஆடை வடிவமைப்பில் இருந்தாலும் கலையும் அழகும் கைவண்ணமும் பளிச்சென கைத்தறி நெசவில் தான் வெளிப்படுகின்றது .
ஆண்கள் மட்டுமின்றி குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும் கைவினை கலையாக நெசவுத் தொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து நெசவாளர் ஓருவர் கூறுகையில்: - நெசவு தொழில் 100 சதவீதம் கவனத்தோடு முழுமையாக உடல் உழைப்பை அளித்தால் மட்டுமே சேலை வடிவம் நிறைவு பெறும். ஒரு சேலைக்கு இரண்டு நாட்கள் என்றாலும் தொடர்ந்து அதே பணியாக அமரும்போது எங்களுக்கு பல்வேறு உடல் வழிகள் ஏற்படுவது உண்டு.
ஆனால் அவ்வாறு சிரமப்பட்டு சேலையை முடித்தும் அதற்கான வருவாய் வெகு நாட்கள் கழித்து கிடைப்பதில் எங்களுக்கு பயன் இருப்பது இல்லை .குலத்தொழிலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் விரும்பினாலும் வறுமையான சூழல் எங்களது குழந்தைகளுக்கும் வர வேண்டாம் என்று எண்ணம் தோன்றுகிறது.
பாரம்பரியத்தை கைவிடாமல் கைத்தறி நெசவை கரம் பிடித்து வரும் நெசவாளர்கள் நிலையான வருமான பெறுவதற்கு அரசு உதவ வேண்டும். தற்சமயம் ஒரு சேலைக்கான கூலி ஆயிரத்திலிருந்து 800 ரூபாயாகவும் சில சமயம் 500 ரூபாயாகவும் குறைந்துவிட்டது. நெய்த சேலைகளும் தொடர்ந்து தேங்கிக் கொண்டு வருவதால் அதற்கான வருவாய் பெற முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளோம் என்று தெரிவித்தனர்.