search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை-அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 1 அடி அதிகரிப்பு
    X

    தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை-அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 1 அடி அதிகரிப்பு

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
    • குண்டாறு அணை பகுதியில் 19.4 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    தென்காசி

    தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது. தென்காசியில் 4 மில்லிமீட்டரும், செங்கோட்டையில் 2.2 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36 அடி கொண்ட குண்டாறு அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 19.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையின் நீர்மட்டம் 34.62 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 1 அடி நீரே தேவை. இதேபோல் அடவிநயினார் அணை பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 93 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 94 அடியானது.

    மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர்மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி-நெல்லை

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு சுற்றுவட்டார பகுதியான கடம்பூரில் சாரல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கடம்பூர், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்வதால் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் வரை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அங்கு 30 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடம்பூரில் 8.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பாளையில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. நாங்குநேரி மற்றும் நெல்லையில் தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணை பகுதிகளில் மழை இல்லை. மாறாக வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    Next Story
    ×