search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம், கீழக்கடையத்தில் நின்று செல்லும்- பாலருவி எக்ஸ்பிரசுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு
    X

    பாவூர்சத்திரம், கீழக்கடையத்தில் நின்று செல்லும்- பாலருவி எக்ஸ்பிரசுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு

    • வருகிற புதன்கிழமை முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தென்காசி தவிர அனைத்து ரெயில் நிறுத்தங்களும், கல்லிடைக்குறிச்சி நிறுத்தமும் நீக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள சில ரெயில் நிறுத்தங்களில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வருகிற புதன்கிழமை முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் போது பாவூர்சத்திரத்திலும், பாலக்காட்டில் இருந்து நெல்லை செல்லும் போது கீழக்கடையம் ரெயில் நிலையத்திலும் வரும் புதன்கிழமை முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    வண்டி எண்: 16791/16792 நெல்லை-பாலக்காடு-நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக் கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை என 7 ரெயில் நிலை யங்களில் நின்று சென்றது. ஆனால் கொரோனாவிற்கு பின்னர் அந்த ரெயில் தனது இயக்கத்தை தொடங்கிய போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி தவிர அனைத்து ரெயில் நிறுத்தங்களும், கல்லிடைக்குறிச்சி நிறுத்தமும் நீக்கப்பட்டது.

    இந்நிலையில் பயணிகள் கோரிக்கையை ஏற்று தற்போது கூடுதல் நிறுத்தங்கள் அளிக்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், 2 ஆண்டுக்கும் மேலான தொடர் கோரிக் கையை ஏற்று கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தங்கள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாவூர்சத்திரம் மற்றும் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வர்த்தகம் சார்ந்து கேரளாவிற்கு நிறைய பேர் பயணிப்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    Next Story
    ×