என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
பெண் குழந்தை பிறந்தால் பெருகும் மரங்கள்...
- 2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார்.
- இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார்.
'இன்னும் ஒரு மகன் பிறந்தால் நன்றாக இருக்குமே..' என்று பேராசைப்படும் ஒரு நாட்டில், ராஜஸ்தானில் உள்ள பிப்லாந்த்ரி என்ற ஒரு சிறு கிராமத்தில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றவும், அதே நேரத்தில் பசுமையைப் பாதுகாக்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகிறார்கள்.
2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார். இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார். ஏன் இந்த நிகழ்வை ஒரு பரந்த திட்டமாக மாற்றக்கூடாது என்று அவர் எண்ணினார். விரைவில், மற்ற கிராமவாசிகளும் அவரது வழியைப் பின்பற்றத் தொடங்கினர்.
பளிங்குச் சுரங்கங்களினால் சுரண்டப்பட்ட மலைகளினால் நிலம் வறண்டு, பசுமை சிதைந்திருந்த இப்பகுதியில் இந்த மேன்மையான திட்டத்தால் 3,50,000 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. மா, நெல்லி முதல் சந்தனம், வேம்பு, மூங்கில் வரை. ஒரு காலத்தில் தரிசாக இருந்த நிலங்களில் மரங்கள் வளர்ந்து 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
மரம் நடுவதுடன், பெண் குழந்தைகளின் பெற்றோர்களும் 18 வயதுக்கு முன் தங்கள் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்றும், பள்ளிப் படிப்பை முடிக்க அனுமதிப்போம் என்றும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள். கிராமவாசிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 31,000 மதிப்பில் ஒரு நிலையான வைப்புக் கணக்கைத் தொடங்கி, அவள் 18 வயதை எட்டியதும், மகளின் கல்விக்காகவோ அல்லது திருமணத்திற்காகவோ அந்தத் தொகையைச் செலவிடுகிறார்கள்.
பிப்லாந்த்ரியின் வளர்ந்து வரும் காடு, நீர் மேலாண்மையை மேம்படுத்தும்போது இந்திய கிராமங்கள் எப்படி பசுமையாக மாறும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
-சித்ரா ரங்கராஜன்