என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சிங்கப்பூர் செயற்கை கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட்
- டி.எஸ்-இஓ செயற்கைக் கோள் அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுக்கும் தன்மை கொண்டது.
- கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூர் மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது
ஸ்ரீஹரிகோட்டா:
இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அத்துடன், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.
அவ்வகையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ முடிவு செய்யப்பட்டு, அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.
ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு செயற்கைக் கோள்களை தாங்கிய பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
#WATCH | Andhra Pradesh: PSLV-C53/DS-EO and 2 other co-passenger satellites launched from the 2nd Launch Pad, SDSC-SHAR, Sriharikota. It accompanies PSLV Orbital Experimental Module (POEM) orbiting the earth as a stabilized platform.
— ANI (@ANI) June 30, 2022
(Source: ISRO) pic.twitter.com/zfK8SZJcvr
இந்த ராக்கெட்டில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம்பிடிக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர்ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.
மேலும் இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது 2.8 கிலோ எடை கொண்டது.