என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கொத்தடிமைகளாக லிபியாவில் சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் மீட்பு
Byமாலை மலர்6 March 2023 8:55 AM IST
- லிபியா நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக முகவர் ஆசைவார்த்தை கூறியதை நம்பி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் அவருடன் சென்றனர்.
- துனிஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டது.
புதுடெல்லி:
லிபியா நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக ஒரு முகவர் ஆசைவார்த்தை கூறியதை நம்பி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் அவருடன் சென்றனர். சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட அவர்கள், அங்கு போனவுடன் தனியார் நிறுவனங்களில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர். கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். உணவும் வழங்கப்படவில்லை. அடித்து சித்ரவதை செய்யப்பட்டனர். 2 மாதங்களாக இதே நிலை நீடித்தது.
அவர்களை மீட்குமாறு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால்சிங் லால்புராவிடம் சில பஞ்சாப் பிரமுகர்கள் மனு அளித்தனர். அவர் அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
துனிஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டது. தூதரகத்தின் உதவியால், முதலில் 4 பேர், அடுத்தபடியாக 8 பேர் என 12 பேரும் மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர்.
Next Story
×