search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
    X

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

    • இன்று காலை முதல் நடைபெற்ற சண்டையில் நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
    • கடந்த 12-ந்தேதி 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், இன்று 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு இந்த சண்டை தொடங்கியது. இன்று மாலை வரை தொடர்ந்து சண்டையில் நக்சலைட்டை சேர்ந்த 12 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    மூன்று மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ரிசர்வ் படை, சிஆர்பிஎஃப்-ன் ஐந்து பட்டாலியன்கள், கோப்ரா, சிஆர்பிஎஃப்-ன் 229-வது பட்டாலியன் ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் இணைந்து நக்சலைட்டுகள் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த மாதத்தில் பிஜப்பூரில் நடைபெற்ற 2-வது என்கவுண்டர் இதுவாகும். கடந்த 12-ந்தேதி நடைபெற்ற சண்டையில் ஐந்து நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் பெண்கள் ஆவார்கள்.

    கடந்த 6-ந்தேதி நக்சலைட்டுகள் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×