search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பீகாரில் 12 பாலங்கள் உடைந்த விவகாரம்- 14 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
    X

    பீகாரில் 12 பாலங்கள் உடைந்த விவகாரம்- 14 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

    • புதிய பாலங்களை புனரமைக்க நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது.
    • குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கட்டுமான செலவு விதிக்கப்படும்.

    பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, 14 பொறியாளர்களை பணி இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், புதிய பாலங்களை புனரமைக்க நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசும் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கட்டுமான செலவு விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொறியாளர்களின் அலட்சியம் மற்றும் கண்காணிப்பு பலனளிக்காததே பாலங்கள் இடிந்து விழுந்ததற்கு முக்கிய காரணம் என பறக்கும் படையினர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மாநில நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சைதன்ய பிரசாத், பொறியாளர்கள் சரியாக கண்காணிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    முன்னதாக, பீகாரின் சரண் மாவட்டத்தில் நேற்று மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்ததால், கடந்த 17 நாட்களில் இதுபோன்ற சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    இச்சம்பவங்கள் குறித்து பேசிய ஊரகப் பணித் துறை (ஆர்டபிள்யூடி) செயலர் தீபக் சிங், "அராரியாவில் பக்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் ஜூன் 18ஆம் தேதி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

    பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மாநில மற்றும் மத்திய குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

    Next Story
    ×