என் மலர்
இந்தியா
பதறவைக்கும் 18 கொலைகள்: டெல்லியை உறைய வைத்த சீரியல் கில்லர் கைது - பின்னணி என்ன?
- நன்சாகூ (nunchaku) ஆயுதத்தை பயன்படுத்தி அவர்களை கழுத்தை நெரிப்பார்
- நெட்ஃபிளிக்ஸில் 2022 இல் வெளியிடப்பட்ட "புட்சர் ஆஃப் டெல்லி" என்ற ஆவணப்படத்தின் மூலம் கவனம் பெற்றது.
ஒரு வருடமாக பிடிபடாமல் தப்பித்து வந்த 'புட்சர் ஆஃப் டெல்லி' என்று அழைக்கப்படும் சீரியல் கில்லர் கொலையாளியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் சந்திரகாந்த் ஜா (57). ஓல்டு டெல்லி ரெயில் நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். பீகாரின் மாதேபுரா பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த், டெல்லியின் அலிபூரில் வசித்து வந்தார். இதுவரை 18 கொடூராமான கொலைகளை செய்தவர்.
அவர், பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் நட்பாக பழகுவார், பின்னர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நன்சாகூ (nunchaku) ஆயுதத்தை பயன்படுத்தி அவர்களை கழுத்தை நெரிப்பார். அவர் அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, காவல்துறையை கிண்டலடித்து கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் அவற்றை திகார் சிறைக்கு அருகே விட்டுச் செல்வார்.
1998 ஆம் ஆண்டு டெல்லி, ஆதர்ஷ் நகரில் ஔரங்கசீப் என்பவரை கொலை செய்ததில் இருந்து சந்திரகாந்த் ஜாவின் சீரியல் கொலைகள் தொடங்கியது. அப்போது சில மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார், ஆனால் 2002 இல் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் பீகாரில் இருந்து டெல்லிக்கு வந்த தனது கூட்டாளி உட்பட 18 பேரைக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, 2006 மற்றும் 2007 க்கு இடையில் சந்தர்காந்த் ஜாவின் கொடூரமான கொலைகள் டெல்லியை அச்சத்தில் ஆழ்த்தியது.
அவர் மூன்று கொலைகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு முதலில் 2013 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் பின்னர் 2016 இல் விடுவிக்கப்படாமல் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு பரோலில் வெளிவந்த அவர் தலைமறைவானார். அவரை பிடித்துக்கொடுத்தால் ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டது.
சந்திரகாந்தின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் நெட்வொர்க்கை டெல்லி போலீசார் ஆறு மாதங்களுக்கும் மேலாக கண்காணித்து வந்த நிலையில் தற்போது அவர் பிடிபட்டுள்ளார்.
சந்திரகாந்தின் வழக்கு நெட்பிளிக்ஸில் 2022 இல் வெளியிடப்பட்ட "புட்சர் ஆஃப் டெல்லி" என்ற ஆவணப்படத்தின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றது.