search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
    X

    சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

    • இந்திரா காந்தி படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
    • டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது சரஸ்வதி விஹார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    பிப்ரவரி 18 அன்று சஜ்ஜன் குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    இவ்வழக்கை முதலில் பஞ்சாப் போலீசார் விசாரித்து வந்தாலும், பின்னர் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×