search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறையில் இருந்தே வெற்றி பெற்ற 2 சுயேட்சை வேட்பாளர்கள்: பாராளுமன்றம் செல்ல முடியுமா?
    X

    சிறையில் இருந்தே வெற்றி பெற்ற 2 சுயேட்சை வேட்பாளர்கள்: பாராளுமன்றம் செல்ல முடியுமா?

    • காலிஸ்தான் போராளி அம்ரித்பால் ஷேக் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
    • உபா சட்டத்தில் சிறையில் உள்ள ஷேக் அப்துல் ரஷீத் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் உள்ள காலிஸ்தான் போராளி அம்ரித்பால் ஷேக் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

    அதே போல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உபா சட்டத்தில் சிறையில் உள்ள ஷேக் அப்துல் ரஷீத் சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

    சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற 2 எம்.பி.க்களும் சிறையில் உள்ளதால் அவர்கள் எவ்வாறு பாராளுமன்றம் செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வெற்றி பெற்றுள்ள அம்ரித்பால், ஷேக் அப்துல் ரஷீத் ஆகியோர் நீதிமன்ற உத்தரவை பெற்றால்தான் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க முடியும் என கூறப்படுகிறது.

    அவர்களை சிறையில் இருந்து வெளியே அழைத்து செல்லும்போது இன்ஸ்பெக்டர் அல்லது உதவி ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். மேலும் செல்போன் பேசுவதற்கும், எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகள் தவிர இதர நபர்களை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

    சிறையில் உள்ள இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தால் தங்களின் எம்.பி பதவியை அவர்கள் இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×