search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே மாதத்தில் 2 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்.. ஐ.டி துறையில் நடப்பது என்ன?
    X

    ஒரே மாதத்தில் 2 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்.. ஐ.டி துறையில் நடப்பது என்ன?

    • கடந்த ஒரே மாதத்தில் [ஜூலையில்] சுமார் 380 நிறுவனங்களில் இருந்து 1,90,9049 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    • Unacademy, Pocket FM,WayCool உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பணி நீக்கத்தில் ஈடுபட்டுள்ளன.

    தொழிநுட்ப நிறுவனங்களில் லே ஆப் எனப்படும் ஊழியர்கள் பணி நீக்கம் சர்ச்சைக்குரிய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் பணியின் நிலைத்தன்மை குறித்த அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.

    மறுபுறம் இந்தியா போன்ற இளம் தலைமுறையினர் அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் பட்டதாரிகளைக் குறைந்த சம்பளம் கொடுத்து பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் செயல் என்ற விமர்சங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

    ஆனால் அரசுகளுக்கும் அதிகார மையங்களுக்கும் மிகவும் நெருக்கமாக உள்ள இந்நிறுவனங்கள் லே ஆப்களை தொடரவே செய்கிறது. அந்த வகையில் உலகம் முழுவதிலும்கடந்த ஒரே மாதத்தில் [ஜூலையில்] சுமார் 380 நிறுவனங்களில் இருந்து 1,90,9049 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரே மாதத்தில் 34 நிறுவனங்களால் மொத்தம் 8,383 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக Unacademy, Pocket FM,WayCool உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பணி நீக்கத்தில் ஈடுபட்டுள்ளன.

    பொருளாதார நிச்சயத் தன்மை இல்லாதது, கொரோனா காலத்தில் நடந்த அதிக ஊழியர் சேர்க்கை , வணிக லாப நோக்கம் உள்ளிட்ட காரணங்களாலேயே சமீப காலங்களாக பணிநீக்கம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×