search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    267 இடங்களில் 21 சதவீத எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுத்த பா.ஜனதா
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    267 இடங்களில் 21 சதவீத எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுத்த பா.ஜனதா

    • டெல்லியில் மட்டும் தற்போது எம்.பி.யாக இருக்கும் 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • கர்நாடகா மாநிலத்தில் 20 பேரில் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் பா.ஜனதா இந்த முறை 370 பிடித்தாக வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து தேர்தல் களப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது கடந்த 2019 தேர்தலில் பெற்ற எண்ணிக்கையை விட 67 அதிகமாகும்.

    இலக்கு மிகப்பெரியது என்பதால் ஒவ்வொரு வேட்பாளர்களையும் மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறது. களத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, ஏற்கனவே எம்.பி.யாக இருந்தால் தொகுதியில் அவருக்கு எதிரான அலை குறித்து கவனமாக ஆராய்ந்து அதன்பின் இடம் வழங்குகிறது.

    பா.ஜனதா இதுவரை இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தற்போது வரை 270 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் ஏற்கனவே போட்டியிட்ட 33 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நேற்று 72 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏறக்குறைய பாதி அளவிற்கு, அதாவது 30 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இரண்டு பட்டியல்களை சேர்த்து 21 சதவீதம் பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் பிரக்யா தாகூர், ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    140 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவுதம் கம்பீர் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார். ஹர்ஷ் மல்ஹோத்ரா தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

    டெல்லியில் மட்டும் தற்போது எம்.பி.யாக இருக்கும் 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மனோஜ் திவாரிக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் 20 பேரில் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 எம்.பி.களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குஜராத் மாநிலத்தில் ஏழு எம்.பி.க்களில் மூன்று பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மத்திய மந்திரி தர்ஷனா ஜர்தோஷ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    Next Story
    ×