search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களிடம் தேங்கிய ரூ.7,755 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
    X

    மக்களிடம் தேங்கிய ரூ.7,755 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

    • 2000 ருபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வருடம் அறிவித்தது.
    • மே 19, 2023 நிலவரப்படி 97.82 சதவீத 2000 ருபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது

    இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜக அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2018-19 காலகட்டத்தில் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திக்கொண்டது.

    இதனைத்தொடர்ந்து புழக்கத்தில் இருந்த 2000 ருபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வருடம் அறிவித்தது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. முழுதாக திரும்பபெறப்படும் வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

    இந்நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று (ஜூன் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில்,மே 19, 2023 நிலவரப்படி 97.82 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதுஎன்றும் மே 31, 2024 நிலவரப்படி ரூ. 3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.7,755 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ரிசர்வ் வாங்கியின் 19 கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம்.

    Next Story
    ×