என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கங்கையை சுத்தம் செய்ய 20,000 கோடி செலவு செய்தும், ஏன் தூய்மையாக இல்லை - மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
- வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
- கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். அதற்கான வேட்மனுவை இன்று பிரதமர் மோடி தாக்கல் செய்தார்.
ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இத்தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
அப்போது பேசிய மோடி, "கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றார். தாய் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.
இந்நிலையில், கங்கை நதி குறித்து மோடி பேசியது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சில கேள்விகளை கேட்டுள்ளார்.
• கங்கை நதியை தூய்மை செய்கிறோம் என ரூ.20,000 கோடி செலவு செய்த நிலையிலும், கங்கை தூய்மையாக இல்லையே ஏன்?
• மோடி, தான் தத்தெடுத்த வாரணாசி கிராமங்களை கைவிட்டது எதற்கு?
• வாரணாசியில் மகாத்மா காந்தியின் பெருமையை அழிக்க மோடி திட்டமிடுவது ஏன்?
என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.