search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீட்தேர்வு முறைகேடால் 24 லட்சம் மாணவர்கள் பாதிப்பு-ராகுல்காந்தி குற்றச்சாட்டு
    X

    நீட்தேர்வு முறைகேடால் 24 லட்சம் மாணவர்கள் பாதிப்பு-ராகுல்காந்தி குற்றச்சாட்டு

    • பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    • வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    நீட் தேர்வில் நடந்த முறைகேட்டால் சுமார் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நரேந்திர மோடி இன்னும் பதவி ஏற்கவில்லை, நீட் தேர்வில் நடந்த முறை கேட்டால் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வு சீர் குலைந்துள்ளது.

    ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண் களுடன் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப் பெண்களைப் பெறுகிறார் கள். ஆனால் வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    கல்வி மாபியா மற்றும் அரசு எந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்த வினாத்தாள் கசிவுவை சமாளிக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது. சட்டம் இயற்று வதன் மூலம் மாணவர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிப்பதாக உறுதி அளித்தோம்.

    இன்று நாட்டின் அனைத்து மாணவர் களுக்கும் நான் பாராளுமன்றத்தில் உங்கள் குரலாக மாறுவேன் என்றும், உங்கள் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளை வலுவாக எழுப்புவேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.

    இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ள இளைஞர்கள் குரலை நசுக்க விடமாட்டோம்.

    இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார்.

    Next Story
    ×