search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மத்திய அரசின் 3 புது குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன - 40 லட்சம் பேருக்கு சிறப்பு பயிற்சி
    X

    மத்திய அரசின் 3 புது குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன - 40 லட்சம் பேருக்கு சிறப்பு பயிற்சி

    • 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
    • கடந்த டிசம்பர் மாதம் புதிய சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தன.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த புதிய சட்டங்களுக்கான மசோத்தள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதிய சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்ததை அடுத்து நாடு முழுக்க சுமார் 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் என 40 லட்சம் பேருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. அதிகாரிகளை புதிய சட்டங்களுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.

    Next Story
    ×